உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!

அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக வங்கி, IMF கடன் வழங்குவார்கள் என பாகிஸ்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இங்கு மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, ஆனால் இதற்கிடையில் வெளியாகியுள்ள, ஒரு அதிர்ச்சி தகவலில், இவ்வளவு பொருளாதார சீரழிவுகள் இருந்தபோதிலும், நாட்டில் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ​​நாட்டில் கார்களின் இறக்குமதியும் வேகமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சொகுசு கார்கள் இறக்குமதி

பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 2200 சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என அறிக்கை ஒன்று கூறுகிறது. இதற்காக சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், விலை உயர்ந்த வாகனங்கள் வரம்பு மீறி இறக்குமதி செய்யப்படுவது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாட்டில் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலை உயர்வுக்கு மத்தியில், இங்குள்ள பணக்காரர்கள் நவாப்கள் ஆடம்பரத்தில் திளைப்பதையே இது காட்டுகிறது.

மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை உள்ளது. மற்றும் அறிக்கைகளின்படி, நாட்டில் 5 பில்லியன் டாலருக்கும் குறைவான வெளிநாட்டு கையிருப்பு மட்டுமே உள்ளது, இது மூன்று வாரங்களுக்கு கூட நீடிக்க கடினமாக உள்ளது. இந்த மோசமான நிலைக்கு மத்தியிலும் பாகிஸ்தான் அரசு வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் டாலர்கள் அதாவது 9770 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி கட்டுப்பாடு காரணமாக, பல்வேறு பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் சர்க்குகள் எடுக்கப்படாமல் குவிந்துள்ளன, இது பாகிஸ்தானின் பல்வேறு துறைமுகங்களில் உள்ள 8,500 கண்டெய்னர்கள் அப்படியே கிடக்கின்றன. ஆனால் அவற்றைப் பெற பாகிஸ்தானிடம் பணம் இல்லை. ஆனால், குறிப்பிடத்தக்க வகையில், பாகிஸ்தான் இறக்குமதிக்காக சுமார் நூறு பில்லியன்கள் என்ற அளவிற்கு பெரிய தொகையை செலவழித்துள்ளது. மேலும், 2 பில்லியன் என்ற அளவில், வரி மற்றும் பிற வரிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே இந்த வேலை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மூன்றாண்டு பழமையான சொகுசு வாகனங்களின் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது, ஜூலை-டிசம்பர் 2022 இல் 1,990 யூனிட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை ‘இறக்குமதி’ செய்யும் சீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.