என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது., 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி


இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வியாழக்கிழமை தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களது மகன்கள் இருவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர்.

சஞ்சீவ் மிஸ்ரா என்ற நபர், மரபணு நோயிலிருந்து தனது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாததால், இனி வாழ விரும்பவில்லை என்று தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.

என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது., 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி | Madhya Pradesh Couple Suicide With Two SonsAPN

இறந்தவர்கள் சஞ்சீவ் மிஸ்ரா (45), அவரது மனைவி நீலம் (42), மற்றும் அவர்களது மகன்கள் அன்மோல் (13) மற்றும் சர்தக் (7) என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது.

இந்த மோசமான சம்பவத்திற்கு சற்று முன்பு, மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “கடவுள் இந்த நோயிலிருந்து எதிரிகளின் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வேண்டும் என வேண்டுகிறேன்… என்னால் குஎன் ழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை, எனக்கு இனி வாழ விரும்பவில்லை” என்று எழுதியுள்ளார்.

என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது., 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி | Madhya Pradesh Couple Suicide With Two SonsAPN

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பூட்டிய கதவை உடைத்து நான்கு பேரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல், சிகிச்சை பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

குடும்பத்தினரின் உறவினர்கள் காவல்துறையினரிடம், தம்பதியினர் தங்கள் மகன்களுக்கு சிகிச்சை அளிக்க தங்களால் இயன்றவரை முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வந்த்தாகவும் கூறியுள்ளார்.
  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.