தன் பிறந்த நாளிலேயே தற்கொலை செய்துகொண்ட தமிழ் டிக்டாக் பிரபலம்!


டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டான்சர் ரமேஷ்

சமீபத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தவர் டான்சர் ரமேஷ்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இவர், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

அதன் வெளிப்பாடாக விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடினார். அதனைத் தொடர்ந்து டிக்டாக்கில் தனது நடன வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தார்.

தன் பிறந்த நாளிலேயே தற்கொலை செய்துகொண்ட தமிழ் டிக்டாக் பிரபலம்! | Tiktok Fame Dancer Ramesh Suicide In Chennai

பின்னர் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸிலும் பதிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்றார். துணிவு படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்துள்ளார்.


தற்கொலை

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார்.

இன்று தான் அவரது பிறந்தநாள் என்று கூறப்படும் நிலையில், அதே நாளில் தற்கொலை செய்துகொண்டு இறந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தன் பிறந்த நாளிலேயே தற்கொலை செய்துகொண்ட தமிழ் டிக்டாக் பிரபலம்! | Tiktok Fame Dancer Ramesh Suicide In Chennai

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.