மும்பை நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, சமாளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மிகவும் வலுவாக உள்ளது. அத்துடன், தாயகத்துக்கு பணம் அனுப்புவது உள்ளிட்டவையும் நன்றாகவே உள்ளது. உலக வணிகத்தேவைகள் குறைவால், பாதிப்புக்குள்ளாகும் பற்றாக்குறையை சமாளிக்க, இவை நமக்கு நன்கு உதவும்.அண்மையில் உலகளவில் ஏற்பட்டுள்ள வினியோக தட்டுப்பாடுகளினால், உலகமயமாதல் மற்றும் பாதுகாப்புவாதம் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவுகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அண்மையில், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுடன், இத்தகைய வர்த்தக உறவு குறித்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும் பல நாடுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement