
சென்னையை சேர்ந்த டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சாலையில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமானார். 50 வயதான ரமேஷ் மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோர கடைகளில் தினக்கூலி வேலை பார்த்து வந்தார்.
சிறுவயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாட அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களின் உதவியால் இன்ஸ்டாகிராமில் தனது நடனத்தை ரீல்ஸ் வீடியோவாக போடத் தொடங்கினார்.
அவரது வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக்கியது. இதன் மூலம் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் ரமேஷூக்கு கிடைத்தது.

இந்நிலையில் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் வெளியான துணிவு படத்தில் இவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் ரமேஷ் நடனம் ஆடி உள்ளார். டான்சர் ரமேஷின் திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in