லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?

தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான டிக்டாக் லோக்கல் டான்சர் ரமேஷ், தனது பிறந்த நாள் அன்று 10வது மாடியில் இருந்து விழுந்து பலியான நிலையில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டிக்டாக்… இன்ஸ்டாரீல்ஸில் பிரேக் டான்ஸ் ஆடியதால் தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியளராக பங்கேற்று பிரபலமானவர் லோக்கல் டான்சர் ரமேஷ்..!

 குரூப் டான்சராக இருந்து வெளியேறி லோடிங் வேலை செய்து வந்த டான்சர் ரமேஷ், டிவியை தொடர்ந்து துணிவு, ஜெயிலர் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

ரமேஷுக்கு சித்ரா என்ற மனைவி யும் இரு குழந்தைகளும் உள்ள நிலையில் கே.பி பார்க்கில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இன்பவல்லி என்ற பெண்ணை துணைவியாக்கிக் கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்தது . தனது கணவர் ரமேஷ் கடத்தி சிறைவைக்கப்பட்டுள்ளதாக சித்ரா போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையின் போது இரண்டாவது மனைவி இன்பவல்லியுடன் வாழ விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்ற நிலையில் மீண்டும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால் ரமேஷ் குடும்பத்தில் பிரச்சனை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ரமேஷ் K.P பார்க்கில் உள்ள இன்பவல்லி வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை குடியிருப்பின் 10 வது மாடியில் இருந்து விழுந்து அவர் பலியானதாக கூறப்படுகின்றது.

அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாரா ?என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்ல நடன திறமை இருந்தும் , மது, மாது என மனது அலைபாய்ந்ததால் டான்சர் ரமேஷ் 42 வயதில் உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது..!

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.