பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரன்பீர் கபூருக்கு அருகில் நின்றுகொண்டு அவரது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயல்கிறார். இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்தும் புகைப்படம் விழவில்லை என தெரிகிறது. இதனையடுத்து தனது மொபைலை ரசிகர் பரிசோதித்து பார்க்கிறார்.
அப்போது ரசிகரிடம் செல்ஃபோனைக்கேட்கும் ரன்பீர் கபூர் அதை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், #angryranbirkapoor என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள், அதுவும் குறிப்பாக வாரிசு நடிகர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரன்பீர் கபூரின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரன்பீரின் இந்த மோசமான நடவடிக்கை அவர் மீதான மரியாதையை சீர்குலைத்துவிட்டது என்றும், அவர் திமிர் பிடித்தவர் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மற்றொரு தரப்பில், இது ஒரு விளம்பர யுக்தி என்றும், ஏதாவது செல்ஃபோன் விளம்பரத்திற்காக இப்படியான வீடியோவை வேண்டுமென்றே எடுத்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in