Dancer Ramesh Suicide: 'துணிவு' நடிகர் டான்ஸர் ரமேஷ் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்!

துணிவு பட நடிகரான டான்ஸர் ரமேஷ் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டான்ஸர் ரமேஷ்டிக்டாக் செயலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். இவரது நடன வீடியோக்களை ரசிப்பதற்கு என்றே பெரும் பட்டாளம் உள்ளது. டான்ஸர் ரமேஷ் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி உள்ளார் டான்ஸர் ரமேஷ். சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த துணிவு படத்திலும் நடித்திருந்தார் டான்ஸர் ரமேஷ்.
​ Pathaan: ரெண்டே நாள்ல இத்தனை கோடிகளா? வாயை பிளக்க வைத்த பதான்!​
துணிவு, ஜெயிலர்துணிவு படத்தில் நடனம் ஆடி சிறிய வேடத்தில் நடித்திருந்தார் டான்ஸர் ரமேஷ். இதேபோல் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் டான்ஸர் ரமேஷ் நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தமிழ் சினிமாவில் மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார் டான்ஸர் ரமேஷ்.
​ Rajinikanth, YG Mahendran: சகலையை விட்டு கொடுக்க முடியுமா? ஒரே போடாய் போட்ட ஓய்ஜி மகேந்திரன்!​
டான்ஸர் ரமேஷ் தற்கொலைஇந்நிலையில், சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டான்சர் ரமேஷ் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அப்பகுதி மக்களையும் அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை கைப்பற்றி பேசின் பிரிட்ஜ் போலீசார், டான்ஸர் ரமேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ​ Vikraman: விக்ரமனை கட்டியணைத்து பரிசு கொடுத்த திருமாவளவன்… என்னன்னு பாருங்க!​
குடும்பத் தகராறில்முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் டான்ஸர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் என்பதும் முதல் மனைவி கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இரண்டாவது மனைவி மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல் மனைவியை சந்திக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த டான்ஸர் ரமேஷ் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. ​ நிச்சயதார்த்தமே இப்படியா? வாயை பிளக்க வைத்த நடிகர்!​
பெரும் சோகம்கடந்த ஆண்டு தனக்கு டான்ஸர் ரமேஷ் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலானது. அதில் தனக்கு வேலையில்லாததால் குடும்பத்துடன் ரொம்பவே கஷ்டப்படுவதாக கண்ணீர் மல்க பேசியிருந்தார். தனக்கு தெரிந்ததெல்லாம் நடனம்தான் என்றும் ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தனது குழந்தையின் படிப்பை நிறுத்தி விட்டு அவர்களை வேலைக்கு அனுப்பிவிட்டதாக கூறி கதறியிருந்தார். இந்நிலையில் டான்ஸர் ரமேஷ் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
​ Siddharth: ஷர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் – அதிதி… அது உண்மைதான் போல!​
டான்ஸர் ரமேஷ் தற்கொலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.