Sharwanand, Nayanthara:முதலில் நயன், இப்போ ஷர்வானந்த்: இருக்கு, இன்னும் நிறைய இருக்கு

90s kids: ஷர்வானந்தின் நிச்சயதார்த்த செய்தி அறிந்த 90ஸ் கிட்ஸுகள் அவருக்கு சாபம் விடவில்லை. மாறாக படு குஷியில் இருக்கிறார்கள்.

ஷர்வானந்த்தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஷர்வானந்த். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பழக்கமானவர் ஆகிவிட்டார். ஷர்வானந்துக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் போஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டியின் பேத்தி ரக்ஷிதாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த 90ஸ் கிட்ஸ் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

​Sharwanand Wife: புடுச்சாலும் புளியங்கொம்பாக புடுச்ச ஷர்வானந்த்: பொண்ணு யார்னு தெரியுமா?!​
விக்னேஷ் சிவன்2கே கிட்ஸுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது. இல்லை என்றால் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கு. ஆனால் எங்களுக்கு மட்டும் இன்னும் ஒரு பொண்ணு கிடைக்கவில்லை என்று 90ஸ் கிட்ஸுகள் புலம்புவது வழக்கமாகிவிட்டது. இதனால் திரையுலக பிரபலங்கள் யாராவது காதலித்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ வயித்தெரிச்சல் அடைந்து சாபம் விடுகிறார்கள். அப்படி 90ஸ் கிட்ஸுகளிடம் அதிகம் சாபம் வாங்கியது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான்.

வாழ்த்துவிக்னேஷ் சிவனை சபித்த 90ஸ் கிட்ஸுகள் ஷர்வானந்தை மட்டும் வாழ்த்தியுள்ளனர். அதற்கும் காரணம் இருக்கிறது. 80ஸ் கிட்ஸான ஷர்வானந்தே தற்போது தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அதனால் நமக்கு திருமணத்திற்கு இன்னும் ஏகப்பட்ட டைம் இருக்கிறது. அவசரப்பட்டு கவலைப்பட்டுவிட்டோம் என சந்தோஷத்தில் இருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸுகள்.

நயன்தாரா80ஸ் கிட்ஸான நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. தற்போது ஷர்வானந்துக்கு திருமணம் நடக்கப் போகிறது. இதற்கிடையே சில 70ஸ் கிட்ஸ் வேறு மொரட்டு சிங்கிளாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் எல்லாம் குட்டீஸ் தான் என தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ்.
பிரபாஸ்70ஸ் கிட்ஸுகளான விஷால், பிரபாஸ் ஆகியோர் எல்லாம் இன்னும் சிங்கிளாகத் தான் இருக்கிறார்கள். விஷாலுக்கு திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் அவ்வப்போது கேட்டு வருகிறார்கள். பிரபாஸுக்கும், அந்த நடிகைக்கும் திருமணம் என அவ்வப்போது ஏதாவது வதந்தி பரவி அடங்குவது வழக்கமாகிவிட்டது. 70ஸ் சீனியர்ஸ் எல்லாம் இருக்கும் போது 90ஸ் குழந்தைகள் திருமணத்திற்கு அவசரப்படக் கூடாது என்று 90ஸ் கிட்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
அதிதிஷர்வானந்தின் திருமண நிச்சயதார்த்ததில் சித்தார்த்தையும், நடிகை அதிதி ராவ் ஹைதரியையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதாவது திருமணமாகி துணையை பிரிந்து வாழும் சித்தார்த்தும், அதிதியும் விரைவில் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​Masaba Gupta: நடிகையின் மகளை இன்று திருமணம் செய்த அதிதியின் மாஜி கணவர்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.