
டெல்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் தொடங்கப்படும்.

அதன் பின்னர், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்கூட்டர்கள் தாமாக இயங்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை செல்லும்.
நாங்கள் பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது இந்த இ-ஸ்கூட்டர் வசதி மூலம், தொலைதூர இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கலையும் தீர்ப்போம்” என்றார்.