ஆங்கிலேயர்களின் அட்டூழியங்கள் குறித்து ஆவணப்படம் எடுக்காதது ஏன்.?

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் , கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறும்போது, ‘‘இந்திய அரசிடம் ‘பிளாக் இன் இந்தியா’ என்ற திட்டம் உள்ளது. பிபிசியின் தலைமையகம் இந்தியாவில் எங்காவது இருந்திருந்தால், மோடி அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மோடி ஜியிடம் ‘ராஜ் தர்மத்தை’ பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பிபிசி தொடர் தடுப்பதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. இது போன்ற செயல்கள் ஆவணப்படத்தில் உள்ள உள்ளடக்கம் உண்மை என்று பொதுமக்களை நம்ப வைக்கிறது. நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதை உங்கள் செயல்கள் எங்களிடம் கூறுகின்றன’’ என தெரிவித்தார்.

ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடை செய்தாலும், தெலங்கானா, கேராளா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களில் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதேபோல் டெல்லியின் புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், பிபிசி ஆவணப்படத்தை திரையிட இருந்த நிலையில் அங்கு போராட்டம் வெடித்தது. கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கேரளாவில் பிரதமர் மோடி குறித்த பிபிசி இன்று திரையிடப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள சண்முகம் கடற்கரையில், மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று இரவு ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படுகிறது. அதேபோல் பிபிசி ஆவணப்படத்தில் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய கொடுமைகள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் தயாரிக்கவில்லை என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதால், இவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரிட்டிஷ் அட்டூழியங்கள் குறித்த ஆவணப்படத்தை ஏன் எடுக்கவில்லை? எங்கள் சொந்த மக்களில் சிலர் நீதித்துறையின் தீர்ப்புகளின் மீது ஒரு ஆவணப்படத்தை நம்புவதால் அவர்கள் மீது நான் வருந்துகிறேன்.

பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை; ராகுல் காந்திக்கு காவல்துறை மறுப்பு.!

ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்ட தருணம் இது. இந்த ஆவணப்படத்தை வெளியிட ஏன் இந்த குறிப்பிட்ட நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது? குறிப்பாக நமது சுதந்திரத்தின் போது இந்தியாவால் அதன் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இந்தியா துண்டு துண்டாக உடைந்து விடும் என்று கணித்த ஒரு மூலத்திலிருந்து வந்தது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.