ஆஸ்திரேலியாவின் பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கதிரியக்க குடுவை மாயமானதைத் தொடர்ந்து அதனைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு குடுவை தசாவதாரம் படத்தில் வருவது போல் எந்த ஒரு பெரிய அழிவையும் ஏற்படுத்தாது என்றபோதும் இதில் உள்ள சீசியம் -137 தனிமம் சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதை தொட்டால் புற்றுநோய் போன்ற கடுமையான நோயை உண்டாக்கும் […]