ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்து சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர். அதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்த விருதை ஆட்சியர் திரும்ப பெற்றுள்ளார். மேலும் இந்த துறை ஊழியர்களுக்கு விருந்து கொடுத்தற்கு விமர்சிக்கப்பட்டது எதிர்பார்காதது என்று தெரிவித்துள்ளார்.