ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் மட்டுமே ஓபிஎஸ் அணி போட்டியிடும். பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என ஓபிஎஸ் தரப்பில் ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்திற்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓபிஎஸ்யிடம் மட்டுமே உள்ளது என்றார்.