தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு பிப்.1ல் கலந்தாய்வு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கு 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றில் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 27ம் தேதி www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கடந்த 28ம் தேதி துவங்கியது.
இன்று (30ம் தேதி) வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் மாலை 5 மணிக்குள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.

இது குறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதார்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும். வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை  www.tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். விபரங்களுக்கு 0422-6611345 என்ற தொலைபேசி மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.