கராச்சி: பாகிஸ்தானில், மர்ம நோயால் ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கெமாரி கிராமத்தில், ஜன., ௧௦ முதல் ௨௫ம் தேதிக்குள் மர்ம நோயால் ௧௮ பேர் பலியாகி உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரத் துறை இயக்குனர் அப்துல் ஹமீத் ஜுமானி கூறியதாவது: கடற்கரையை ஒட்டியுள்ள மவாச் கிராமத்தில், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்கு, ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழப்புக்கு காரணம், தண்ணீர் மாசு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை, சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதிக காய்ச்சல், தொண்டை வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இவர்கள் இறந்ததாக, குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement