தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் இன்று. நடிப்பு, பின்னணி பாடகி என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கும் அவர், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக உயர்ந்த ஸ்ருதிஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி பொதுவெளியில் காரசாரமாக பேசப்பட்டது. நடிகர் ரன்பீர் கபூர் முதல் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா வரை பல நடிகர்களுடன் ஸ்ருதியின் பெயர் கிசுகிசுக்களில் சிக்கியது.
ரன்பீர் கபீர் உடனான கிசுகிசுக்கள் அனைத்தும் பொய் என ஸ்ருதிஹாசனே காரசாரமாக பதில் அளித்திருந்தார். ஆனால், நாகசைதன்யாவுடனான காதல் கிசுகிசு குறித்து அவர் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. சமந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நாகசைதன்யா நடிகை ஸ்ருதி ஹாசனுடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் இருவரும் காதலித்ததாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. விருது விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட ஸ்ருதிஹாசன் – நாகசைதன்யா தங்களின் பரஸ்பர நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ஒரு சில வருடங்களிலேயே அவர்களின் காதல் முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் மனம் ஒன்றி பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அவர்களின் காதல் பிரிவுக்கு காரணம் ஸ்ருதியின் தங்கை அக்ஷரா என்று கூறப்பட்டாலும், வெளிப்படையான காரணம் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் அவர்கள் உண்மையில் காதலித்தார்களா? என்று கூற தெரியவில்லை. ஆனால், அப்படியொரு வதந்தி அப்போது இணையத்தில் சுழன்று கொண்டிருந்தது. அதன்பிறகு ஸ்ருதிஹாசனும், நாகசைதன்யாவும் 2016 ஆம் ஆண்டு பிரேமம் படத்தில் இணைந்து ஒன்றாக நடித்தனர். அடுத்த ஆண்டில் அதாவது, 2017 ஆம் ஆண்டு சமந்தாவை நாகசைதன்யா திருமணம் செய்து கொண்டார்.