பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பழனி பெரிய நாயகி அம்மன் […]
