புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நடிகர் பிரபு சந்தித்து பேசினார்.
நடிகர் பிரபு நேற்று காலை 9.00 மணிக்கு, புதுச்சேரிக்கு வந்தார். பின், திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.
அங்கு முதல்வரை சந்தித்து, 10 நிமிடங்கள் பேசினார். அப்போது நடிகர் பிரபு, தன் தந்தை சிவாஜி கணேசன் தொடர்பான புத்தகத்தை முதல் வருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
வெளியே வந்த பிரபு, சொந்த பணி காரணமாக புதுச்சேரிக்கு வந்ததாகவும், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாகவும் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement