சென்னை: பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து விட்டார் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேட்டி சேலை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்றாக 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.