69 வயசு… 'தீ' தளபதி.. பனியனை கழட்டி முதல்வர் ஸ்டாலின் வெறித்தனமான உடற்பயிற்சி..!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில்கூட ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் சென்று தன்னை பரபரப்பாக காட்டிக்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இப்போது தினமும் காலை வாக்கிங் சென்று வருவதுடன் உடற்பயிற்சியையும் செய்ய தொடங்கியுள்ளார்.

அவ்வப்போது ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது. இதற்கு முன்பு வெளியான வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் டீ ஷர்ட் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்திருப்பார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள வீடியோவில் மேல் சட்டை அணியாமல் இயல்பாக உடற்பயிற்சி செய்துள்ளார். ஆனால், அந்த வீடியோவில் நேருக்கு நேராக அவரது முகம் காட்டப்படாமல் முதுகு பக்கம் மட்டும் தெரியும்படி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வரும் நிலையில், மேலாடை இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாதா என்ன? பொதுவாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் பலர் மேலாடை அணியாமல் இருப்பார்கள் தானே, அதுபோலத்தான் இதுவும் என கூறி முதல்வர் ஸ்டாலினை ஊக்கப்படுத்தி ட்வீட் போட்டு வருகின்றனர்.

மேலும், எந்தவொரு முதலமைச்சரும் செய்ய கூச்சப்படும் விஷயத்தை நம்ம முதல்வர் தன்னம்பிக்கையாக செய்ததுடன் அதை தைரியமாக வீடியோ எடுக்க வைத்து வெளியிட்டு அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், இன்றைய இளைஞர்களே செய்வதற்கு தயங்கும் விஷயத்தை 69 வயதிலும் முதல்வர் செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒருவரது உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் மட்டுமே ஜிம் செய்யும்போது சட்டையை கழற்ற வேண்டும் என்பதில்லை; நீங்கள் இருக்கும் நிலையையே உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருவதால் இந்த வீடியோ விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. ஒருவேளை இருக்குமோ..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.