AK 62: அஜித் படம் பற்றி விக்னேஷ் சிவன் சொன்னது அப்போ புரியல, இப்போ புரியுது

Ajith Kumar: ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், அவர் முன்பு அளித்த பதில் பற்றி தற்போது பேசப்படுகிறது.

ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். விக்னேஷ் சிவனை நீக்கியதற்கான சரியான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன ஒரு விஷயம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன்ஐயப்பன் கோவிலுக்கு அண்மையில் சென்றிருந்தார் விக்னேஷ் சிவன். அப்பொழுது அவரை சந்தித்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். அஜித்தின் ஏ.கே. 62 படம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு சாமி சரணம் என்று மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார் விக்னேஷ் சிவன். அப்படி என்றால் அஜித் படத்தில் இருந்து தான் நீக்கப்படுவது விக்னேஷ் சிவனுக்கு ஏற்கனவே தெரியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புரியல
புரிகிறதுஏ.கே. 62 படம் பற்றி விக்னேஷ் சிவன் அப்படி பதில் அளித்தது குறித்து அப்போ புரியல, இப்போ புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு நியாயம் கேட்டு அவரின் ஆதரவாளர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள். விக்னேஷ் சிவனை லைகா நிறுவனம் வேண்டுமென்றே ஒதுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

​AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்​
எதிர்பார்ப்புஅஜித்தை அடுத்து விக்னேஷ் சிவனும் லண்டனுக்கு கிளம்பினார். இதையடுத்து படப்பிடிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட தகவல் தான் வெளியாகியுள்ளது. விக்கியை நேரில் அழைத்து அந்த முடிவை தெரிவித்தார்கள் என்று கூறப்படுகிறது.

கவலைஅஜித் குமாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற தன் கனவு இப்படியாகிவிட்டதே என விக்னேஷ் சிவன் இடிந்துபோய்விட்டாராம். காதலி நயன்தாராவே மனைவியாக வந்தது, திருமணமான கையோடு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என அடுத்தடுத்த சந்தோஷத்தில் இருந்து வந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்க்ரிப்ட்விக்னேஷ் சிவன் எழுதி வைத்திருந்த ஸ்க்ரிப்ட் அஜித்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்க்ரிப்ட்டை மாற்றுமாறு விக்னேஷ் சிவனிடம் கூறினாராம். ஆனால் இறுதி ஸ்க்ரிப்ட்டை விக்னேஷ் சிவன் இன்னும் முடிக்கவில்லையாம். இதையடுத்தே இப்போதைக்கு வேண்டாமே என்று கூறிவிட்டாராம் அஜித்.

​Ajith, AK62: முருகதாஸுக்கு விஜய் செய்ததை விக்னேஷ் சிவனுக்கு செய்த அஜித்?​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.