மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம்


பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகனுக்கு இந்தியா என  பெயர் சூட்டிய தம்பதி

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம் | Pakistani Bangladeshi Couple Named Their Kid IndiaFacebook/omar esa

அதில் புதிய பெற்றோர் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை மற்றும் எங்களை போன்ற செயலை செய்த பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்து அறிவுரை தொடங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு

எங்கள் மகன் இப்ராஹீம் பிறந்த போது அவன் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, அவனை எங்கள் அறையில் எங்களோடு உறங்க வைத்தோம், ஆனால் சிறிது ஆண்டுகளுக்கு பிறகு அவன் சிறுவனாக வளர்ந்த பிறகும், அவனுக்கு என்று தனியாக அறை இருந்தும், அவன் எங்களுடனே எனக்கும் எனது மனைவிக்கும் இடையில் படுத்து உறங்குகிறான்.

மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம் | Pakistani Bangladeshi Couple Named Their Kid India Facebook/omar esa

நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன், எனது மனைவி வங்கதேசத்தை பூர்விகமாக கொண்டவர் எங்கள் இருவருக்கும் பிறந்த மகன் இப்ராஹிம், இவ்வாறு பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் நடுவில் இருப்பதால் அவரை நாங்கள் இந்தியா என்று நாங்கள் அழைக்கிறோம்.

இந்த இந்தியா எனது வாழ்க்கையில் மிகவும் பிரச்சனையாக உள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஒமர் இசாவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.