ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக அதிருப்தி வாக்குகள்- ஜி.கே.வாசன் போட்ட அரசியல் கணக்கு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில்
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணியினரும் போட்டியிட தயாராகி வருகின்றனர். ஆனால் இதுவரை வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை
தமிழ் மாநில காங்கிரஸ்
தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஏமாற்றிய திமுக அரசு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத அரசாக திமுக அரசு உள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதற்கு எதிரணியில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே அணியாக பிரதான எதிர்க்கட்சி உடன் கூட்டணி சேர வேண்டும்.

50 ஆண்டுகால அரசியல்

அப்படி நடந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நினைக்கும் மாற்றம் உறுதியாக ஏற்படும். தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக கூட்டணியில் தான் தமிழக அரசு சுழன்று கொண்டிருக்கிறது என்றார். தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தலுக்கும் ஒரே கோட்பாடு மற்றும் காலக்கெடு கொடுக்கும்.

எதிர்மறை வாக்குகள்

அதன் அடிப்படையில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முறையாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து எதிர்மறை வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றி பெறக்கூடிய பிரகாசமான நிலையில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுவார். இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது.

மக்கள் கடும் கோபம்

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து எதிர்மறை வாக்குகளை செலுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றக் கூடிய அரசாக திமுக அரசு இருப்பதால் இந்த அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்கள் எண்ணங்கள் தேர்தலில் பிரதிபலிக்கும்.

அதிமுக – தமாகா கூட்டணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தலிலும் கூட்டணி வைத்துள்ளது. அது தற்போதும் தொடர்கிறது. மக்கள் மீது குறைந்த மாதங்களிலே அதிக சுமையை ஏற்றிய அரசு தமிழக அரசியலிலேயே திமுக அரசு மட்டும் தான்.

தவறிய திமுக அரசு

அதற்காக திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். மின்சார வரி, வீட்டு வரி, பால் விலை உயர்வு என அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் குறையவில்லை. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது அரசுடைய கடமை. அதை சரிவர அவர்கள் செய்வதாக தெரியவில்லை. இது குறித்து மக்கள் மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.