வாலிபரை வழிமறித்து கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திள்ளது.
சென்னை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுதா சுந்தர் நேற்று இரவு இளம்பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கல்பாளையம் சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சுதா சந்தரை வழி மறைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சுதா சந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுதா சந்தரை கொடூரமாக வெட்டி கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.