மத்திய பட்ஜெட் 2023 Live Updates: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி…

பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் தாக்கல் செய்தார்.

“கொரோனா பாதிப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரின் தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7%-ஆக இருக்கும், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி வசூல் சிறப்பாக இருந்தது,  நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புக்குள் வந்துவிட்டது, சமூக நலனுக்கான செலவு ரூ.21.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, வேளாண்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3%-ஆக அதிகரிப்பு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது, சிறு, குறு தொழில் துறையினருக்கான கடன் வழங்கல் 30.6% அதிகரித்துள்ளது” உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட் 2023- 2024 லைவ் அப்டேட்களுக்கு விகடனுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.