புதுடில்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதனால், அந்த நிறுவனத்தின் பங்குகளை, சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

பார்லியில் இந்த விவகாரத்தை எழுப்புவது மற்றும் நிலைப்பாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக, திரிணமுல் காங்கிரஸ்,சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதானி பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில், கார்கே, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், டிஆர்எஸ் கட்சியின் கேசவராவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்தனர்.
கார்கே அளித்த நோட்டீசில், ” பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிறுவனத்தின் பங்குகளை, பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி மற்றும் நிதிநிறுவுனங்கள் பங்குகளை வாங்கி பொது மக்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்கு கேள்வி நேரம், ஜீரோ ஹவரை ஒத்தி வைக்க வேண்டும் ” எனக்கூறப்பட்டு இருந்தது.
லோக்சபாவில் காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூர் அதேபோன்ற நோட்டீசை அளித்தார். இதனை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தார். இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.