ஈரோடு கிழக்கு – செந்தில் பாலாஜி போட்ட ஸ்மார்ட் பிளான்: அதிருப்தியாளர்கள் காட்டில் அடைமழை!

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது முதன்முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

ஸ்டாலின் போட்ட உத்தரவு!இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தானே வெற்றி பெறும் என்ற எண்ணம் பொது மக்களிடம் சாதாரணமாக பரவியுள்ளது. அதனால் வெற்றி மட்டும் முக்கியமல்ல. எதிர்தரப்பில் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் திமுக மும்முரம் காட்டுகிறது.

களத்தில் இறங்கிய அமைச்சர்கள்திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுடன் பேசி அவரது ஆதரவையும் இளங்கோவன் கூட்டணிக்கு பெற்றுத் தந்துவிட்டார். இருப்பினும் களத்தில் காங்கிரஸை விட திமுகவினரே பிரச்சாரத்தில் முந்துகின்றனர். திமுக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ், நாசர் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
செந்தில் பாலாஜி ஸ்மார்ட் மூவ்!திமுக சார்பில் இத்தனை அமைச்சர்கள் இறக்கிவிடப்பட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியே ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் களத்தில் உள்ளவர்கள். எதையும் பிரம்மாண்டமாக அதே சமயம் ஸ்மார்டாக செய்யக்கூடிய செந்தில் பாலாஜி இந்த இடைத் தேர்தலிலும் பக்கா பிளானோடு காய் நகர்த்தி வருகிறார். இவரது நகர்வு எதிர் தரப்பை கலவரப்படுத்தியுள்ளது.
ஆசை வலை விரிக்கும் செந்தில் பாலாஜிஅதிமுக, அமமுக ஆகிய கட்சிகளிலிருந்து திமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி. அதிமுக அரசில் அமைச்சராக இருந்த போது கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போதைய தொடர்புகளை தற்போது தூசி தட்டிவருகிறார். ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலில் விலகி நிற்பவர்கள், கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என பெரிய லிஸ்ட் தயார் செய்து அவர்களுக்கு ‘ஜாக்பாட்’ ஆசை காட்டி திமுகவுக்கு கொண்டு வரும் வேலையை தொடங்கியுள்ளாராம்.
பிரம்மாண்ட கூட்டம்!தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கொண்டு பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளாராம். அந்த நிகழ்வில் அதிமுகவிலிருந்து கணிசமானோரை திமுகவில் இணைக்கலாம் என்ற திட்டத்தில் அவர் காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.
அதிருப்தியாளர்கள் காட்டில் அடைமழைசெந்தில் பாலாஜியின் இந்த மூவ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செங்கோட்டையன் அண்ட் கோ தற்போது அதிருப்தியாளர்கள் யாரென்று கணக்கு எடுத்து வருகிறார்களாம். அவர்களைத் தேடிச் சென்று ‘பழம்’ விட்டு வருகிறார்கள். அத்துடன் அவர்களை எப்படியாவது தக்கவைக்க ஸ்வீட் பாக்ஸ்களை உடைக்க வேண்டும் என்று சேலத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக சொல்கிறார்கள். ‘அதிருப்தியாளர்கள் காட்டில் அடைமழை பெய்கிறது, நாமும் தலைமையோடு நெருக்கம் காட்டாமல் முறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம்’ என்று முணுமுணுக்கிறார்களாம் சில ரத்தத்தின் ரத்தங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.