சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைய உள்ள மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியின், 4வது வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இன்று பரிசோதிக்கப்பட்டது. வரும் மே மாதத்தில் இயந்திரம் பொருத்தப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
