முதலில் தவறிய வாய்ப்பு..பின் கோல்கீப்பரிடம் மாயாஜாலம் செய்து கோல் அடித்த மெஸ்சி..PSG வெற்றியால் ஆர்ப்பரித்த மைதானம்


மாண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கோல் இல்லாத முதல் பாதி

Stade de la Mosson மைதானத்தில் நடந்த போட்டியின் 34வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த கோல் ஆப்சைடு என்று அறிவிக்கப்பட்டது.

முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், இரண்டாம் பாதியில் அனல் பறந்தது.

மூவர் கூட்டணி

பம்பரமாய் சுழன்று ஆடிய PSG வீரர்கள் எதிரணிக்கு பயத்தை காட்டினர். அந்த அணியின் பாபியன் ருய்ஸ் 55வது நிமிடத்தில் தூரத்தில் இருந்து ஒரே ஷாட்டில் கோல் அடித்து மிரட்டினார்.

அதன் பின்னர் நட்சத்திர வீரர் மெஸ்சி (72வது நிமிடம்) தன்னிடம் வந்த பந்தை கோல்கீப்பரின் அருகே கொண்டு சென்று, அவரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.

மாண்ட்பெல்லியர் அணி பதிலடியாக 89வது நிமிடத்தில் கோல் அடித்தது. அர்னாவுட் நோர்டின் இந்த கோலை தள்ளினார்.

அதனைத் தொடர்ந்து 90+2வது நிமிடத்தில் வாரன் ஜைரே ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு மாண்ட்பெல்லியர் அணியால் கோல் அடிக்க முடியாததால், PSG 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இது PSG-க்கு கிடைத்த 16வது வெற்றி ஆகும். அந்த அணி இதுவரை 21 போட்டிகளில் இருமுறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.       

மெஸ்சி/Messi

முதலில் தவறிய வாய்ப்பு..பின் கோல்கீப்பரிடம் மாயாஜாலம் செய்து கோல் அடித்த மெஸ்சி..PSG வெற்றியால் ஆர்ப்பரித்த மைதானம் | Messi Goal After Offside Vs Montpellier In France

@ PASCAL GUYOT/GettyImagesSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.