அணு ஆயுதம் கொண்டு எதிர்க்க தயாராக இருக்கிறோம்! மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை: வட கொரியா அதிரடி


மிகப்பெரும் அணுசக்தியுடன் அமெரிக்காவின் இராணுவ உத்திகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.


கூட்டு ராணுவ பயிற்சி

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள் என கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தென் கொரியாவுடன் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளில் அமெரிக்கா மீண்டும் பங்கேற்று வருகிறது.
இதில் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் விமான தாங்கிகள் போன்ற பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

அணு ஆயுதம் கொண்டு எதிர்க்க தயாராக இருக்கிறோம்! மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை: வட கொரியா அதிரடி | North Korea Warns West America Of Nuclear ForceREX/Shutterstock

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்திய தகவலில், தென் கொரியப் போர் விமானங்களுடன் அமெரிக்கா B-1B குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் F-22 மற்றும் F-35 போர் விமானங்களை பறக்கவிட்டது உட்பட சில கூட்டு இராணுவப் பயிற்சிகள் நடந்தது என குறிப்பிட்டுள்ளது.


வட கொரியா எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், வியாழன்று பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், தென் கொரியாவுடன் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளில் அமெரிக்கா பங்கேற்று வருகிறது, இது பதட்டங்களை “தீவிர சிவப்புக் கோட்டுக்கு” தள்ளுவதாக எச்சரித்துள்ளது.

அத்துடன் மிகப்பெரும் அணுசக்தியுடன் அமெரிக்காவின் இராணுவ உத்திகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வட கொரியா மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுதம் கொண்டு எதிர்க்க தயாராக இருக்கிறோம்! மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை: வட கொரியா அதிரடி | North Korea Warns West America Of Nuclear ForceAFP via Getty Image

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், பயிற்சிகளின் விரிவாக்கம் கொரிய தீபகற்பத்தை “பெரிய போர் ஆயுதக் களஞ்சியமாகவும், மிக முக்கிய போர் மண்டலமாகவும்” மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அணுகுண்டு மற்றும் ஒரு முழுமையான மோதலுக்கு முழுமையான மோதல் என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ முயற்சிக்கும் வட கொரியா கடுமையான எதிர்வினையை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.