பிரபல இயக்குநர், நடிகர் கே.விஸ்வநாத் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்


தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரான கே.விஸ்வநாத் மரணமடைந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழம்பெரும் இயக்குநர்

தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே. விஸ்வநாத்.

இயக்குநராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது முழுப்பெயர் காசிநாதுனி விஸ்வநாத் ஆகும். இவர் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல விருதுகளை வாங்கிக் குவித்தது.

கே. விஸ்வநாத்/K.Vishwanath

அதிர்ச்சி மரணம்

இந்த நிலையில், 92 வயதான கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவரது மறைவு திரையுலகினை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கே.விஸ்வநாத் பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.    

கே. விஸ்வநாத்/K.Vishwanath

கே. விஸ்வநாத்/K.VishwanathSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.