மிரட்டலாக கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்.. வேண்டுமென்றே கால்களை பலமாக தாக்கிய எதிரணி வீரர்


ரியல் மாட்ரிட் அணி வீரரை தாக்கிய வாலென்சியா வீரர் கேப்ரியல் பாலிஸ்டா உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

ஒரே ஷாட்டில் கோல்

ஸ்பெயினின் சான்டியாகோ பெர்னாபே மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் வாலென்சியா அணிகள் மோதின.

முதல் பாதி கோல்கள் விழாததால் 0-0 என்று முடிந்தது. அதன் பின்னர் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ரியல் மேட்ரிட் அணியின் மார்கோ அசென்சியோ, தூரத்தில் இருந்து ஒரே ஷாட்டில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் வினி ஜூனியர் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார்.

தாக்கிய வீரர்

ரியல் மேட்ரிட்டின் வேகத்தை தடுக்க வாலென்சியா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. 72வது நிமிடத்தில் வினி ஜூனியரின் கால்களில் வாலென்சியாவின் கேப்ரியல் பலமாக தாக்கினார்.

மிரட்டலாக கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்.. வேண்டுமென்றே கால்களை பலமாக தாக்கிய எதிரணி வீரர் | Real Madrid Won 2 Valensia

@ESPN

இதில் கீழே விழுந்த வினி ஜூனியர் அவரிடம் சண்டையிட்டார். உடனே இரு அணி வீரர்களும் குவிந்ததால் கள நடுவர் கேப்ரியலுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார்.

மிரட்டலாக கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்.. வேண்டுமென்றே கால்களை பலமாக தாக்கிய எதிரணி வீரர் | Real Madrid Won 2 Valensia

@(Bernat Armangue/Associated Press)

இறுதிவரை வாலென்சியா அணியால் கோல் அடிக்க முடியாததால், ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.     


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.