அண்டை நாட்டின் மீது படையெடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட சீன ஜனாதிபதி! எச்சரிக்கும் சிஐஏ


2027ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சி.ஐ.ஏ இயக்குநர் எச்சரித்துள்ளார்.


தைவான் மீது உரிமை கொண்டாடும் சீனா

சீனா தனது அண்டை நாடான தைவானை தங்கள் பிரதேசமாக உரிமை கொண்டாடுகிறது. ஆனால் தைவான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சீனாவின் மேற்கு பகுதியில் தைவானின் மீது இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற கவலையைத் தூண்டியது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டிப்பதில் இருந்து சீனா விலகி இருக்கிறது.

ஜி ஜின்பிங்/Xi Jingping

@Kevin Frayer/Getty Images

சிஐஏ எச்சரிக்கை

இந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு ஜி ஜின்பிங் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

வில்லியம் பர்ன்ஸ்/William Burns

@Tom Brenner/Reuters

இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில், ‘உக்ரைனில் பல சங்கடமான பின்னடைவுகளை சந்தித்த ரஷ்ய ராணுவத்தின் செயல்திறனால் அவர் நிதானமாக இருந்த போதிலும், தைவான் மீதான ஜியின் லட்சியங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது.

நான்கு ஆண்டுகளில் தைவானை ஆக்கிரமிக்க தயாராக இருக்குமாறு தனது ராணுவத்திற்கு ஜி உத்தரவிட்டுள்ளார் என்பது உளவுத்துறையின் விடயமாக அமெரிக்காவுக்கு தெரியும்.

இப்போது அவர் 2027 அல்லது வேறு எந்த ஆண்டிலும் படையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார் என்று அர்த்தம் இல்லை, ஆனால் இது அவரது கவனம் மற்றும் அவரது லட்சியத்தின் தீவிரத்தை நினைவூட்டுகிறது’ என தெரிவித்துள்ளார்.

அண்டை நாட்டின் மீது படையெடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட சீன ஜனாதிபதி! எச்சரிக்கும் சிஐஏ | Cia Warns China Will Attack On Taiwan

முன்னதாக, உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற்றால் தைவான் மீது படையெடுப்பதற்கு சீனாவை அது உற்சாகப்படுத்தும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.