இலங்கை தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை


இலங்கையில் 13 ஆவது திருத்த சட்டத்தில் எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ளார்.

இந்த மனுவை நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கியுள்ளார்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Annamalai Presented A Petition In Delhi

பரபரப்பான சூழல்

இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்று 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான மனுவை வழங்கியுள்ளார்.

இதன்போது மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.