உதயநிதி செலக்ட் செய்த அந்த அதிகாரி: இது பக்கா ஸ்டாலின் ஃபார்முலா!

தமிழ்நாடு அரசால் பதினொன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 41 ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக ரீதியாக அதிகாரிகள் இதுபோல் இடமாற்றம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஒவ்வொரு இட மாற்றமும், துறை மாற்றமும் சிலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும் சிலருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கும்.

விளையாட்டுத் துறைக்கு புதிய அதிகாரி!அந்த வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ.மேகநாத ரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டது பல்வேறு தரப்பினரின் கவனத்தைப் பெற்றுள்ளது. நேற்று (பிப்ரவரி 2) சென்னை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தில் மேகநாத ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏன் உதயநிதிக்கு இந்த துறை?உதயநிதி ஸ்டாலின் அண்மையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வர் வசம் இருந்த சிறப்பு திட்டம் செயலாக்கத்துறையும் உதயநிதி வசம் வந்துள்ளது. இளைஞர்கள், பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை இந்த துறைகள் மூலம் செய்ய முடியும். அதற்காகவே இந்த துறைகள் உதயநிதிக்காக தேர்வு செய்யப்பட்டன.
அதிகாரிகள் மனது வைத்தால் வெற்றி தான்!அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் உதயநிதி. அமைச்சராக சிறப்பாக செயல்படுவதற்கு தனது உழைப்பு மட்டும் போதாது, துறை சார்ந்த அதிகாரிகளின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். அந்த வகையில் துடிப்பான, நேர்மையான அதிகாரிகளை தனக்கு அருகில் வைத்துக் கொண்டால் பாதி பணி முடிந்தது என நினைக்கிறாராம் உதயநிதி.
ஸ்டாலின் ஃபார்முலா!ஸ்டாலின் அமைச்சராக, துணை முதல்வராக இருந்த போது பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை குறித்து வைத்திருந்தார். முதலமைச்சராக அவர் பதவியேற்றதும் அந்த அதிகாரிகளையும் முக்கிய இடத்தில் அமர வைத்தார். ஏனெனில் அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும் என்றால் அதற்கு அதிகாரிகளின் பங்களிப்பு மிக முக்கியம். அந்த வகையில் உதயநிதியும் திறமையான, நேர்மையான அதிகாரிகளை குறிப்பாக இளம் அதிகாரிகளை கவனித்து வருகிறார் என்கிறார்கள்.
ஸ்டாலினை ஃபாலோ செய்யும் உதயநிதிவிருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி அங்கு சமூக நலத்திட்டங்களை ​​கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் துடிப்புடன் இருந்தார். முதன்முறையாக விருதுநகரில் புத்தக கண்காட்சியை நடத்தி பாராட்டு பெற்றார். இவையெல்லாம் உதயநிதிக்கு சொல்லப்பட உடனே அவர் பெயரை டிக் அடித்ததாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். விருதுநகரில் சிறப்பாக செயலாற்றிய மேகநாத ரெட்டி விளையாட்டுத் துறையிலும் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.