உளவு பலூன் பறந்த விவகாரம்: அமெரிக்க அமைச்சரின் சீன பயணம் ரத்து| Spy balloon issue: US ministers visit to China canceled

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அணு சக்தி ஏவுதளங்கள் மீது சீனாவின் உளவு பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் சீன வெளிநாட்டு பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது.

latest tamil news

தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பலுனை நாங்கள் சுடவில்லை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் , அரசு முறைப்பயணமாக சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது சீன பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.