கடைசி நிமிடங்களில் கோல் அடித்து அல் நஸரை காப்பற்றிய ரொனால்டோ!


அல் நஸர் மற்றும் அல் படேஹ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முதல் பாதி சமநிலை

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் அப்துல்லா பின் ஜாலவி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் – அல் படேஹ் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியின் 12வது நிமிடத்திலேயே அல் படேஹ் அணி வீரர் கிறிஸ்டியன் டெல்லோ கோல் அடித்து அல் நஸர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் நஸரின் தலிஸ்கா 42வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. அதன் பின்னர் இரண்டாம் பாதி தொடங்கியது.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் சோபியான்னே பென்டெபிகா கோல் அடித்தார்.

ரொனால்டோ அடித்த கோல்

90 நிமிடங்கள் வரை அல் நஸரால் கோல் அடிக்க முடியாததால் ரொனால்டோ ரசிகர்கள் தோல்வி பயத்தில் இருந்தனர்.

ஆனால் 90+3வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ அதனை கோல் ஆக மாற்றினார்.

இதன்மூலம் தோல்வியில் இருந்து தப்பிய அல் நஸர் போட்டியை டிரா செய்தது. ஆட்டத்தின் 90+5வது நிமிடத்தில் கோல் அடித்திருந்த தலிஸ்காவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. 

ரொனால்டோ/Ronaldo

@Ali ALDAIF / AFP 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.