
காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு
திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரவுடி பேபி, கார்டியன், அரண்மணை 4ம் பாகம் படத்தில் நடிக்கிறார். இதுதவிர இகோர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு காந்தாரி படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த ஹன்சிகா ஒரே கட்டமாக படத்தை நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட ஹன்சிகா படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் நேற்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணனும் உடன் சென்றார்.