கோவை மாவட்டம் சின்னப்பாளையம் பகுதியில் அதிக அளவில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரின் வாகனத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் மூட்டை மூட்டையாக போதை சாக்லேட் பிடிபட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் நடத்தி வரும் மளிகை கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த சோதனையில் 160 கிலோ எடையுள்ள போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ.10,82,000 இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்காக பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.