லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னாவின் க்யூட்டான நடிப்பில் 2010-ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பையா’. கார்த்தி, தமன்னாவின் கெமிஸ்ட்ரி, யுவனின் ரொமான்டிக் பாடல்கள், லிங்குசாமியின் நேர்த்தியான திரைக்கதை என அனைத்தும் ஒருசேர அமைந்த இப்படம் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பெற்றது.
‘பையா’ படம் வெளியாகி 12 வருடங்களான நிலையில், இதன் இரண்டாம் பாகத்தினை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் பலர் கதாநாயகியாக பாலிவுட் நடிகையும், ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் நடிக்கிறார் என்று செய்தி பரப்பினர்.

Dear Media Friends,
This is to bring to your notice that Janhvi Kapoor has not committed to any Tamil Films at the moment, requesting not to spread false rumors.
— Boney Kapoor (@BoneyKapoor) February 3, 2023
இந்தத் தகவல் சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜான்வி கபூர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.