திருச்சி மாவட்டத்தில் பிரிந்து சென்ற மனைவி வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பேரமங்கலம் மரியம் பட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராகுல்(23). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ராகுல் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை. இதைத்தொடர்ந்து நேற்றும் செல்போன் மூலமாக மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்பொழுதும் அவரது மனைவி வர மறுத்ததால் மன வேதனையடைந்த ராகுல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆட்டுக்கோட்டையில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ராகுலை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராகுலின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.