தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் நேற்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் என்ற கிராமத்தில் அலமேலு என்பவர் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.