HBD Simbu: நள்ளிரவில் சிம்புவின் பர்த்டே ட்ரீட்: சம்பவம் செய்த ஏ.ஆர். ரஹ்மான்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சிம்பு, கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர் என திரைத்துறையில் தனது பன்முகத்திறமையை வெளிபடுத்தியவர். சிம்பு என்றாலே வம்பு என்ற நிலை மாறி தற்போது சினிமாவில் மிஸ்டர் பர்பெக்ட் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சிம்பு.

சமீபத்தில் உடல்எடை காரணமாக அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகர் என சிம்புவை சொல்லலாம். அந்தளவிற்கு இவரின் தோற்றம் கேலி செய்யப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக லாக்டவுனில் தனது உடல் எடையை குறைத்து ‘மாநாடு’ படத்தில் வேறலெவல் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை தொடர்ந்து ரசிகர்களின் பேவரைட் கூட்டணியான சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர், ரஹ்மான் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான இந்தப்படமும் அதிரிபுதியான வெற்றி வாகை சூடியது. இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு புதிய படம் எதிலும் கமிட் ஆகாத சிம்பு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பப்ட ‘பத்து தல’ படத்தில் நடித்து வந்தார். கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகி வருகிறது. ‘சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

RIP K Viswanath: பிரபல மூத்த இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவு: திரையுலகினர் பேரதிர்ச்சி.!

இந்நிலையில் சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12:07 மணிக்கு ‘பத்து தல’ படத்தின் ‘நம்ம சத்தம்’ எனும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குரலில் வெளியாகியுள்ள இந்தப்பாடல்இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthi: பிரம்மாண்டமாக உருவாகும் ‘பையா 2’: கார்த்திக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ.!

‘பத்து தல’ படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.