மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமித் தவா மிஸ்ரா என்பவருக்கு ஸ்வேதா மிஸ்ரா என்ற 23 வயது மகள் இருந்துள்ளார். இவர் பள்ளிக்கரணை வரதராஜபுரம் நான்காவது தெருவில் வீடு எடுத்து தங்கியவாறு ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவருடைய தங்கை சினேயா மிஸ்ராவும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் விடுதியிலேயே தங்கி B.tech படித்து வந்துள்ளார்.
நேற்று இரவு அக்காவை பார்க்க பள்ளிக்கரணை வீட்டிற்கு சினேயா வந்தார். அப்போது, நீண்ட நேரமாக கதவை தட்டியும் ஸ்வேதா கதவை திறக்கவில்லை. தன்னிடம் இருந்த ஒரு சாவியை போட்டு சினேயா கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அங்கே ஸ்வேதா பிணமாக தொங்குவதை பார்த்து சினேகா அதிர்ச்சி அடைந்தார்.
அவர் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததை பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஸ்வேதா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை.