அசத்தலாக கோல் அடித்த மெஸ்சி! PSG மிரட்டல் வெற்றி


டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


சமனில் முடிந்த முதல் பாதி

Parc Des Princes மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்து மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என சமனில் இருந்தது.

மெஸ்சியின் வெற்றிக்கான கோல்

இரண்டாம் பாதியில் துரத்தலில் ஈடுபட்ட லயோனல் மெஸ்சி, 58வது நிமிடத்தில் கோல் அசத்தலாக கோல் அடித்தார்.

அதுவே அந்த அணியின் வெற்றிக்கான கோல் ஆக மாறியது. PSG அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் PSG 22 ஷாட்களும், டௌலூஸ் 14 ஷாட்களும் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.        

மெஸ்சி/Messi

@PSG_inside(Twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.