அரக்கத்தனத்திற்கு எந்த காரணமும் செல்லாது! இந்த அரக்கர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்..கொந்தளித்த பிரபல தமிழ்ப்பட நடிகை


இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளம்பெண்கள் சில ஆண்களால் கொடூரமாக தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள்

கடந்த 2021ஆம் ஆண்டு சூன் மாதம், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள இரண்டு இளம் பெண்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தங்கள் மாமன் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவர்களை தடி மற்றும் கற்களால் மோசமாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகவியலாளர் டரெக் ஃபடாஹ் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அத்துடன், ”இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கும், நாகரீகத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

காஜல் அகர்வால் ஆதங்கப் பதிவு

அவர் வெளியிட்ட பதிவை பிரபல நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளதுடன் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது பதிவில், ‘என்ன கொடுமை இது. இந்த அரக்கர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இது போன்ற அரக்கத்தனத்திற்கு எந்த காரணமும் சரியான காரணமாக இருக்க முடியாது.

மீண்டும் மீண்டும் மனித நேயத்தை எப்படி மறந்து விடுகிறோம் என்பது வருத்தமளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.    

காஜல் அகர்வால்/Kajal Aggarwal



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.