ஈரோடு: உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கின. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகித்து பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.