அமெரிக்காவில் கண் மருந்தை பயன்படுத்தி ஒருவர் இறந்த நிலையில் குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அந்த மருந்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் Artificial Tears Lubricant Eye Drops என்ற கண் மருந்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மருந்து கண்களில் லேசான எரிச்சல், உலர்தன்மை இருந்தால் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த மருந்தை பயன்படுத்திய 55 பேருக்கு கண் தொற்று, நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த கண் மருந்தினை திரும்ப பெறுவதாக, குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், இந்த மருந்தினை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
