வயநாடு,
கேரளாவில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது ஆய்வில் உறுதியானது.
வயநாட்டில் உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் மாணவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் நடப்பட்ட ஆய்வில் மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறும் அதிகாரிகள் பள்ளியின் கிணறுகளில் குளோரிநேஷன் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :